ஜகார்த்தா, ஆகஸ்ட் 20 – கடந்த ஆகஸ்ட் 17 – ம் தேதி இந்தோனேசியாவின் 69-வது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தோனேசியா கடந்த 1945 -ம் ஆண்டு நெதர்லாந்திடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றது. கடந்த 2005- ம் ஆண்டு, இந்தோனேசியாவிற்கு சுதந்திர தினம் ஆகஸ்ட் 17 தான் என்பதை நெதர்லாந்து உறுதிப்படுத்தியது.
சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில், மாபெரும் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் ஓரே இடத்தில் ஏராளமான வழுக்கு மரங்கள் நடப்பட்டு அதன் உச்சியில் பரிசுப் பொருட்களும் வைக்கப்பட்டிருக்கும்.
இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து வழுக்கு மரத்தில் ஏறி இந்த பரிசுப் பொருட்களை எடுப்பார்கள்.
இந்த நிகழ்வின் அற்புதமான படங்களை கீழே காணலாம்:-
(வழுக்கு மரங்களின் உச்சியில் மிதிவண்டி உட்பட பல பரிசுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன)
(கடினமான வழுக்கு மரத்தில் இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஏறுகின்றனர்)
(இரண்டு பெண்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு கொடுத்து வழுக்கு மரம் ஏறுகின்றனர்)
(இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் நின்று கொண்டு பரிசுப் பொருட்களை எடுக்க முயற்சி செய்கின்றனர்)
(வெற்றிகரமாக வழுக்கு மரத்தின் உச்சியை அடைந்த ஒருவர் மிதிவண்டியை இறக்குகிறார்)
படங்கள்: EPA