Home தொழில் நுட்பம் யூடியூப்-ல் இசைக்காக மட்டும் அறிமுகமாகும் புதிய வசதி!

யூடியூப்-ல் இசைக்காக மட்டும் அறிமுகமாகும் புதிய வசதி!

658
0
SHARE
Ad

youtubeகோலாலம்பூர், ஆகஸ்ட் 21 – யூ டியூப் (You Tube)-ல் இணைய இணைப்பு இல்லாத நிலையிலும், குறிப்பிட்ட சில இசைத் துணுக்குகளைக் கேட்டு மகிழும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுளின் பிரபல காணொளி ஊடகமான யூ டியூப், தனது பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடு, பல்வேறு புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது.

காணொளிக் காட்சிகளை பார்க்கவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டு வந்த யூ டியூப் வலைதளத்தில் இனி இசைத் துணுக்குகளையும் இணைய வசதி இல்லாத பொழுது கேட்டு மகிழ இயலும்.

#TamilSchoolmychoice

‘யூ டியூப் இசை சேவை’ (You Tube Music Service) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வசதியினை பயனர்கள் குறிப்பிட்ட கால அளவிற்கான சந்தாவினை செலுத்தி பயன்படுத்த முடியும்.

YouTube-logo-full_colorயூ டியூப் இசை சேவையின் மூலம் நமக்குத் தேவையான இசையை கேட்பதற்கு ‘யூ டியூப் மியூசிக் கீ’ (YouTube Music Key) எனும் புதிய வசதி யூ டியூப் இணைய தளத்தில்  விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 20 மில்லியன் பாடல்களைக் கொண்டுள்ள இந்த யூ டியூப் மியூசிக் கீ வசதியினை பயனர்கள் 9.99 அமெரிக்க டாலர்கள் சந்தாவாக செலுத்தி இயக்க முடியும்.

விரைவில் 30 நாட்கள் இலவச முன்னோட்டமாக அறிமுகமாக உள்ள இந்த யூ டியூப் இசை சேவை உலகம் முழுவதும் பெரும் வரவேற்பினைப் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.