இந்நிலையில் இம்ரான்கானுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசு தரப்பு முடிவு செய்தது. இதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. முதலில் அரசுடன் பேச மறுத்த இம்ரான் பின்னர் பேச்சுவார்த்தைக்கு சம்மதித்தார்.
இரு தரப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தலைநகரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. அரசு தரப்பில் தகவல் தொடர்பு துறை மந்திரி பெவய்ஸ் ரஷித், பஞ்சாப் கவர்னர் சவுத்ரி சர்வார், அங்சான் இக்பால், ஜாஹித் ஹமீது மற்றும் அப்துல் காதர் பலோச் ஆகியோரும்,
இம்ரான்கான் தரப்பில் ஆசாத் உமர், ஷா முகமது குரேஷி, ஆரிப் ஆல்வி ஜாவித் ஹாஷ்மி மற்றும் ஜெஹாங்கீர் தரீண் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாரபட்சமற்ற இடைக்கால அரசை உருவாக்கவேண்டும், தேர்தல் கமிஷன் ராஜினாமா செய்யவேண்டும். தேர்தலில் குளறுபடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை தண்டிக்கவேண்டும் என்ற 6 நிபந்தனைகளை இம்ரான்கான் விதித்துள்ளார்.
இரு தரப்புக்கும் இடையே இன்னும் சில சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என தெரிகிறது. அதன் பின் இரு தரப்பினருக்கிடையே சுமூக ஒப்பந்தம் ஏற்பட்டு நாட்டில் இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.