இருப்பினும் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தினார். இதனால், விமானத்தில் பயணம் செய்த 154 பேரும் உயிர் தப்பினர். இதில் சில பயணிகள் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பையில் இருந்து ஆறு பணிப்பெண்கள் (ஏர் ஹோஸ்டஸ்) உள்பட 154 பயணிகளுடன் இண்டிகோ 6இ-176 விமானம் டெல்லிக்கு நண்பகலில் புறப்பட்டது.
பிற்பகல் 3.30 மணிக்கு அந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்பட்டது. அப்போது, திடீரென சக்கரங்களை இயக்கும் “கியர்’ பகுதியில் தீ பற்றியது. இதை எதிர்பார்க்காத விமானி உடனடியாக விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரகால செய்தி அனுப்பி எச்சரித்தார்.