Home கலை உலகம் கத்தி படம் கை மாறியது! கண்டிப்பாக திரைக்கு வரும்! – ரசிகர்கள் உற்சாகம்

கத்தி படம் கை மாறியது! கண்டிப்பாக திரைக்கு வரும்! – ரசிகர்கள் உற்சாகம்

597
0
SHARE
Ad

kaththi-posters-fi-610x330சென்னை, ஆகஸ்ட் 21 – ‘கத்தி’ படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. கத்தி படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கி கண்டிப்பாக தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை முன்னதாக ‘லைக்கா’ நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் தயாரித்ததால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘கத்தி’ படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

kaththiஇனி படம் வெளியாவதற்கு எந்த தடையும் இருக்காது என கத்தி படத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.