Home நாடு எம்எச்17 பயணிகளுக்காக நாளை நாடெங்கிலும் 1 நிமிட மௌன அஞ்சலி!

எம்எச்17 பயணிகளுக்காக நாளை நாடெங்கிலும் 1 நிமிட மௌன அஞ்சலி!

618
0
SHARE
Ad

Datuk-Seri-Ahmad-Shabery-Cheekபுத்ரா ஜெயா, ஆகஸ்ட் 21 – எம்எச்17 பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளின் சடலங்கள் நாளை சிறப்பு விமானம் மூலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டு வரப்படவுள்ளது. சடலங்களை விமான நிலையத்தில் இறக்கி வைக்க சுமார் 45 நிமிடங்கள் ஆகும் என்று கூறப்படுகின்றது.

அந்த நேரத்தில், பலியான மலேசியப் பயணிகளுக்காக அனைவரும் சுமார் 1 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என ஊடகம் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் ஷாபெரி சீக் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடெங்கிலும் பொதுமக்கள் இந்த மௌன அஞ்சலியை நாளை காலை 10.45 மணியில் இருந்து 11.30 மணிக்குள் செலுத்தலாம் என்றும் ஷாபெரி சீக் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த மௌன அஞ்சலி அலுவலகம், பள்ளி என அனைத்து துறைகளிலும் செலுத்தப்படவுள்ளதாகவும் ஷாபெரி குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், நாளை தொலைக்காட்சிகளில் அந்த குறிப்பிட்ட நேரத்தில் எந்த ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் இடம்பெறாது என்றும் ஷாபெர் தெரிவித்தார்.

நாளை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பேரரசர் அகோங் துங்கு மு அட்ஸாம் ஷா கலந்து கொள்ளவுள்ளார். ஈப்போவிற்கு கொண்டு செல்லவுள்ள பயணிகளின் உடல்களைப் பெற பேராக் சுல்தானும் நாளை ஈப்போவிற்கு செல்கிறார்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு தூதர்கள் என அனைவரும் நாளை நடைபெறவுள்ள இறுதி அஞ்சலி நிகழ்விற்கு அழைக்கப்படவுள்ளார்கள்.