Home உலகம் இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள்!

இஸ்ரேல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்திய ஹமாஸ் தீவிரவாதிகள்!

712
0
SHARE
Ad

Israel-airportகாசா, ஆகஸ்ட் 22 – இஸ்ரேல் விமான நிலையத்தில் ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. காசா பகுதியில் ஆட்சி செய்யும் ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 2069 பாலஸ்தீன மக்கள் பலியாகியுள்ளனர்.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்னர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் தீவிரவாதிகளும் கடும் தாக்குதலில் ஈடுபட்டுவருகின்றனர்.

EL_Al_Planeஇந்நிலையில் நேற்று இஸ்ரேலில் உள்ள பென் குரியோன் விமான நிலையம் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் இராக்கெட் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக காசா வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும் இந்த தாக்குதல் சம்பவத்தினால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றிய தகவல் ஏதும் கிடைக்க வில்லை.

#TamilSchoolmychoice

இத்தாக்குதல் நடத்தப் படுவதற்கு முன்பு, சர்வதேச விமானங்கள் இந்த விமான நிலையத்திற்குள் இயக்கப்பட வேண்டாம் என ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் செய்தி வெளியிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.