இதுகுறித்து ஃபோலே பணியாற்றி வந்த குளோபல் போஸ்ட் இதழின் தலைவர் பிலிப் பல்போனி கூறியதாவது:- “ஃபோலேவை விடுவிக்க எங்கள் நிறுவனத்திடமும், அவரின் குடும்பத்தாரிடமும் சுமார் 132 மில்லியன் அமெரிக்க டாலர்களை பிணைத் தொகையாக தீவிரவாதிகள் கேட்டனர்.
இந்தத் தகவலை உடனடியாக உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தோம்” என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையும், தீவிரவாதிகள் பிணையத் தொகை கேட்டதை உறுதி செய்துள்ளது.
இனியாவது தீவிரவாதிகளின் பிடியில் உள்ள ஏனைய மக்களை மீட்க ஒபாமா அரசு முயற்சி செய்யுமா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்பி உள்ளன.