செப்பாங், ஆகஸ்ட் 22 – எம்எச்17 விமானப் பேரிடரில் பலியான மலேசியப் பயணிகளில், 20 பேரின் சடலங்கள் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று காலை 9.55 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.
மலாய் பாரம்பரிய உடை அணிந்த மலேசிய இராணுவப் படையினர் சவப்பெட்டிகளை சுமந்து, தனித்தனி வாகனங்களில் ஏற்றினர்.
இந்த நிகழ்வின் போது, பேரரசர் அகோங் துங்கு மு அட்ஸாம் ஷா கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.
மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளியுறவு தூதர்கள் என அனைவரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
(சிறப்பு விமானத்தில் இருந்து சவப்பெட்டிகள் இறக்கப்படுகின்றன)
(சகல மரியாதையுடன் சவப்பெட்டிகள் வாகனங்களில் ஏற்றப்படுகின்றன)
(20 சவப்பெட்டிகளுக்கும் தனித்தனியாக 20 வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றன)
(பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகின்றது)
(வாகனங்கள் சவப்பெட்டிகளை சுமந்து கொண்டு புறப்படத் தயாராக உள்ளன)
படங்கள்: EPA