அண்டிரோய்டு திறன்பேசிகளில் உள்ள கூகுள் தேடல் வசதி, 50 மொழிகளில் இயக்கக் கூடியதாக இருக்கும். எனினும் ஒரு சமயத்தில் ஒரு மொழியினை மட்டுமே பயனர்கள் இயக்கு மொழியாக பயன்படுத்த முடியும். பிற மொழிகளைப் பயன்படுத்த ‘செட்டிங்ஸ்’ (settings)-ல் மாற்றங்கள் செய்ய வேண்டும். இந்நிலையில் கூகுள் தற்போது ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம் பயனர்கள் ஒரே சமயத்தில் 5 மொழிகளைப் பேசி கூகுள் தேடல் வசதியினை இயக்க முடியும். புதிதாக அறிமுகமாகி உள்ள இந்த செயலி பயனர்கள் பேசும் மொழியினை மிகச் சரியாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் செயல்படும். எனினும் பயனர்கள் பேசும் அந்த 5 மொழிகளும் ஒரு சொற்றொடருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
உதாரணமாக, இந்த புதிய வசதியினைப் பயன்படுத்தி பயனர்கள் எந்தவொரு ‘செட்டிங்’ (setting) மாற்றமும் இன்றி, ஆங்கிலம் கொண்டு ஜிபிஎஸ் கருவியினை இயக்கவும், ஜெர்மன் மொழியில் நண்பருக்கு குறுந்தகவல்களை அனுப்பவும் முடியும். மேலும் கூகுள், தற்போது 5 மொழிகளில் இருக்கும் இந்த வசதியினை கூடுதல் மொழிகளுடன் இயக்க முயன்று வருகின்றது.
இந்த புதிய வசதியானது கூகுள் தேடலின் 3.6 பதிவில் மட்டுமே உள்ளது. அதனை கூகுள் ப்ளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்கம் செய்யலாம். பதிவிறக்கம் செய்யப்பட கூகுள் தேடலில் கீழ்காணும் செட்டிங்ஸ் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கூறிய வசதியினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூகுள் செட்டிங்க்ஸ்->சர்ச் & நவ்->வாய்ஸ்->லாங்குவேஜ் என்ற பட்டியினை தேர்வு செய்தால், அங்கு பயனர்களுக்கு தேவையான 5 மொழிகளை தேர்வு செய்ய முடியும்.
உலகத்தை சிறியதாக்கும் கூகுளின் முயற்சி மீண்டும் நிரூபணமாகி உள்ளது.