Home கலை உலகம் ஷங்கரின் ‘ஐ’ படத்தின் 90 வினாடிகள் குறுமுன்னோட்டம்! கசிந்த தகவல்கள்!

ஷங்கரின் ‘ஐ’ படத்தின் 90 வினாடிகள் குறுமுன்னோட்டம்! கசிந்த தகவல்கள்!

1091
0
SHARE
Ad

AIசென்னை, ஆகஸ்ட் 23 – ஷங்கர் இயக்கத்தில் சீயான் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜ’ திரைப்படத்தின் டீசருக்காக (குறுமுன்னோட்டம்) உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காரணம், ஷங்கர் படம் என்றாலே அதில் பிரம்மாண்டம் இருக்கும். அதே வேளையில், இந்த படத்திற்காக சீயான் விக்ரம் மிகவும் கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். எடையை குறைத்து மிகவும் ஒல்லியாக, 110 கிலோ எடையுடன் அசுரனாக என தனது உடலில் மாறுபட்ட தோற்றங்களை விக்ரம் காட்டியிருக்கிறார்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சில பத்திரிகை நண்பர்களுக்கு மட்டும் ஷங்கள் அந்த 90 வினாடி காட்சிகள் அடங்கிய டீசரை போட்டுக் காட்டியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

AI 1

அதை பார்த்த பத்திரிகையாளர்கள் இன்னும் அந்த ஆச்சர்யத்திலிருந்து மீளவில்லை என்று தகவல் கசிந்துள்ளது. காரணம் அந்த அளவிற்கு காட்சிகளில் பிரம்மாண்டம். 110 கிலோ எடையுடன் விக்ரமின் மிரட்டும் தோற்றம் என உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடும் என்றும் கூறப்படுகின்றது.

அந்த 90 வினாடி முன்னோட்டம் குறித்து பத்திரிகையாளர்கள் சில கசிய விட்ட தகவல்கள் இதோ:-

1. பாலம் ஒன்றில் கனரக வாகனம் ஒன்று செல்கிறது. அதன் பின்னால் பெரிய பெரிய மரக்கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. விக்ரம் (வித்தியாசமான தோற்றம்) அந்த கனரக வாகனத்தை துரத்திக் கொண்டு ஓடுகிறார். அந்த வாகனத்தின் பின்னால் இருந்து மரக்கட்டைகள் உருண்டு விழுகின்றன.

2. இன்னொரு பாலத்தில் விக்ரம் (இயல்பான தோற்றம்) சிவப்பு நிற சட்டை அணிந்து மோட்டார் ஒன்றை ஓட்டுகின்றார். அவரது மோட்டாரின் நிறமும், சட்டையின் நிறமும் ‘அனிமேட்ரானிக்ஸ்’ என்ற முறைப்படி மாறிக் கொண்டே இருக்கின்றது.

AI 3

3. இன்னொரு காட்சியில் விக்ரம் உடற்பயிற்சி செய்வது போல் தன் கட்டுடலைக் காட்டுகின்றார். இன்னொரு காட்சியில் விக்ரம் (வித்தியாசமான தோற்றம்) பெரிய மரம் ஒன்றை தூக்குகின்றார். கேமரா அவரது பாதி முகத்தை மட்டும் காட்டுகின்றது.

4. அதே போல், நிறைய பாடல் காட்சிகள், அதில் விக்ரமும், எமியும் ஆடிப் பாடுகின்றார்கள். விக்ரம் இசைக்கருவி ஒன்றை இசைக்கிறார். காட்சி முழுவதும் வண்ண வண்ண பலூன்களால் நிறைந்துள்ளது. எமி சிவப்பு பட்டு சேலையில் மிக அழகாக இருக்கிறார். விக்ரம் அவரை தூக்குகின்றார்.

5. இறுதியாக எமி ஜாக்சன் ஒரு அறையில் அடைக்கப்படுகின்றார்.. அவரது கைகள் கட்டப்பட்டுள்ளன. பலமாக கத்துகிறார் “யார் நீ” … விக்ரம் (வித்தியாசமான தோற்றத்துடன்) கதவை பூட்டுகின்றார். ‘ஐ’ படத்தின் தலைப்பு கதவின் மீது வருகின்றது.

vikram-ay (2)

இவ்வளவு தான் அந்த 90 வினாடி டீசர் …

இதில் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி, சென்னை நேரு அரங்கத்தில் ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது. இதை தொலைக்காட்சிகள் நேரலையாகக் காட்டவுள்ளன.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளப் போகிறவர் யார் தெரியுமா? நம்ம ஆர்னால்ட்-ஸ்வார்ஸனீகர் தான்…