சென்னை, ஆகஸ்ட் 23 – இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியின் மலேசிய இந்தியர் காங்கிரஸ் (மஇகா) கட்சியைச் சேர்ந்த 35 பேர் அண்மையில் தமிழகத்திற்கு சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
தங்களின் தமிழக சுற்றுலாவின் ஒரு பகுதியாக சென்னையில் கவிப்பேரரசு வைரமுத்துவைச் சந்தித்து நலம் விசாரித்த மஇகா குழுவினர், அண்மையில் தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கத்தின் அனைத்துலக சிறந்த நூல் பரிசை அவரது ‘மூன்றாம் உலகப் போர்’ நாவல் பெற்றதற்கு, மலேசியத் தமிழர்களின் சார்பில் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
நாட்டின் மிகப்பெரிய கூட்டுறவு நிறுவனமான தேசிய நில நிதிக் கூட்டுறவு சங்கம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக நடத்தும் அனைத்துலக அளவிலான சிறந்த தமிழ் நூலுக்கான போட்டியில் வைரமுத்துவின் ‘மூன்றாம் உலகப் போர்’ வெற்றி பெற்று 10,000 அமெரிக்க டாலர் பரிசைப் பெற்றுள்ளது.
வைரமுத்துவைச் சந்தித்த பின்னர் தாப்பா மஇகா குழுவினர் அவருடன் எடுத்துக் கொண்ட படத்தைக் கீழே காணலாம். அனைவரின் கரங்களிலும், ‘மூன்றாம் உலகப் போர்’ நாவல்….