Home நாடு சிலாங்கூர் சுல்தானுடனான சந்திப்பு குறித்து திங்கட்கிழமை முடிவு – காலிட் இப்ராகிம்

சிலாங்கூர் சுல்தானுடனான சந்திப்பு குறித்து திங்கட்கிழமை முடிவு – காலிட் இப்ராகிம்

399
0
SHARE
Ad

Khalid Ibrahimகிள்ளான், ஆகஸ்ட் 23 – நாடு திரும்பியிருக்கும் சிலாங்கூர் சுல்தானுடன் தனது மந்திரி பெசார் பதவி குறித்து சந்திப்பு நடத்துவது பற்றி தான் திங்கட்கிழமை முடிவு செய்யவிருப்பதாக சிலாங்கூர் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் அறிவித்துள்ளார்.

கிள்ளானில் உள்ள சுங் ஹூவா சீன இடைநிலைப் பள்ளியின் பழைய மாணவர் சங்கத்தின் விருந்து நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய காலிட், சுல்தானைச் சந்திக்கும் போது அது குறித்து பத்திரிக்கை அறிக்கையை விடுப்பேன் என்றும் கூறினார்.

மந்திரி பெசார் பதவி குறித்து எந்தவித அறிக்கையையும் நான் வரும் வரை வெளியிட வேண்டாம் என சிலாங்கூர் சுல்தான் கேட்டுக் கொண்டதை அடுத்து, கடந்த இரண்டு வாரங்களாக காலிட் இப்ராகிம் அதிகாரபூர்வ அறிவிப்பு எதனையும் வெளியிடுவதை தவிர்த்து வந்தார்.

#TamilSchoolmychoice

சிலாங்கூர் மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் சிக்கலைத் தீர்ப்பதற்காக தனது வெளிநாட்டுப் பயணத்தைச் சுருக்கிக் கொண்டு சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின்  நாடு திரும்பியுள்ளார்.

காலிட்டுக்குப் பதிலாக பக்காத்தான் ராயாட் கூட்டணி சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பிகேஆர் கட்சித் தலைவி வான் அசிசாவை முன்மொழிந்துள்ளது.

-பெர்னாமா