ஜெனிவா, ஆகஸ்ட் 25 – உலகையே கடும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கும் உயிர் கொல்லியான எபோலாவை முற்றிலுமாக கட்டுப்படுத்த ஓராண்டு காலம் தேவைப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டூஜாரிக் கூறியுள்ளதாவது:- “மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய எபோலா நோய்க்கு, இதுவரை 1300 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அண்டை நாடுகள் தங்கள் எல்லைகளுக்குள்ளாகவே தடை வைத்துக் கொண்டுள்ளன.”
“எபோலா வைரஸ் உள்ள நாடுகளில் இருந்து பயணிகள் வீறு நாடுகளுக்கு பயணிக்க முடியவில்லை. இந்த நடவடிக்கைகளால் எபோலா வைரஸை கட்டுப்படுத்த முடியாது.
இது ஒரு சர்வதேச கண்ணோட்டத்துடன் வேண்டிய பிரச்சினை ஆகும். இதற்கு முழுமையான தீர்வைக் காண உலக நாடுகளின் ஒத்துழைப்பு அவசியமானதாகும்.”
“இந்த கொடிய நோயை உடனடியாகக் கட்டுப்படுத்த முடியாது. அதற்கு குறைந்தது ஓராண்டு காலமாவது ஆகும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன” என்று அவர் கூறியுள்ளார்.