Home நாடு உலக சுகாதார நிறுவனம்: அடாம் பாபா, நூர் ஹிஷாம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாகத் தேர்வு

உலக சுகாதார நிறுவனம்: அடாம் பாபா, நூர் ஹிஷாம் புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாகத் தேர்வு

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: உலக சுகாதார நிறுவனம் மலேசியா மற்றும் ஜப்பானை 2021-2024 காலத்திற்கு புதிய நிர்வாக குழு உறுப்பினர்களாக ஒப்புதல் அளித்துள்ளது.

மலேசிய உறுப்பினர்களாக சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தலைமை தாங்குவார், சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மாற்று உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

” இந்த நியமனம் மூன்று ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சுகாதாரத் துறையில் தொழில்நுட்ப தகுதி வாய்ந்த 34 நபர்களைக் கொண்டது. ஒவ்வொரு நபரும் உலக சுகாதார சபையால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பு நாடுகளால் நியமிக்கப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

“இதன் முக்கிய செயல்பாடுகள் சுகாதார சபையின் முடிவுகள் மற்றும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதும், அதை அறிவுறுத்துவதும் ஆகும்,” என்று நூர் ஹிஷாம் கூறினார்.

மலேசியாவும் ஜப்பானும் சீனா மற்றும் ஆஸ்திரேலியாவிற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.