கேரள மாநிலத்தில் பூரண மதுவிலக்கை அமுல்படுத்த, அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் 418 மதுபான கடைகளை மூட உத்தரவிட்டார்.
அதன் பின்னர் 312 மதுக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், தற்போது இயங்கி வரும் 312 மதுபான கடைகளையும் நேற்று இரவு 10 மணி முதல் மூட முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில், கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டதையடுத்து, தங்களிடம் உள்ள மதுவை விற்பனை செய்வதில் உரிமையாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதன்படி, கடைசி நாளன்று ஒரு மதுபான பாட்டில் வாங்கினால், 3 மதுபான பாட்டில் இலவசம் எனவும், ஒரு பீர் வாங்கினால், இன்னொரு பீர் இலவசம் எனவும் அறிவித்திருந்தனர்.
இதில், அரசின் திடீர் உத்தரவால் தங்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மதுக் கடைகளை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.