Home நாடு சிலாங்கூர் மந்திரி பெசாராவதற்கு மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும் – அரசியல் வல்லுநர்கள் கருத்து

சிலாங்கூர் மந்திரி பெசாராவதற்கு மலேசியாவில் பிறந்திருக்க வேண்டும் – அரசியல் வல்லுநர்கள் கருத்து

481
0
SHARE
Ad

anwar-wan-azizahபெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 27 – வேறு நாட்டில் பிறந்து மலேசியாவில் வந்து குடியுரிமை பெற்றவரோ அல்லது பதிவு செய்து குடியுரிமை பெற்றவரோ, சிலாங்கூரில் மந்திரி பெசாராக முடியாது என்றும், அதை தடுப்பதற்கு சிலாங்கூர் அரசாங்கத்தில் விதி இருக்கின்றது என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி ஆகிய இருவருமே சிங்கப்பூரில் பிறந்தவர்கள்.

இது குறித்து அரசியல் வல்லுநர் டாக்டர் சாத் சலீம் ஃபரூக் கூறுகையில், “மாநில அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 53 (3) கூறுவது என்னவென்றால், பிறப்பால் மலேசியராக இல்லாதவர்கள் சிலாங்கூர் மந்திரி பெசாராக பதவி ஏற்க முடியாது. எனினும், சுல்தான் தனது விருப்பத்தின் படி இந்த நியமனத்தை செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், மற்றொரு வல்லுநர், சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி வகிக்க சிலாங்கூரில் பிறந்தவராகத் தான் இருக்க வேண்டும் கருத்து தெரிவித்துள்ளார்.Khalid-&-Azmin-Ali 300 x 200

பல்வேறு அரசாங்க நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராக இருக்கும் ஹமீட்சுன் கைருடின் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “மாநில சட்டத்தை பிகேஆர் பின்பற்ற வேண்டும். இதற்கு முன் எல்லா மந்திரி பெசாரும் சிலாங்கூரில் பிறந்தவராகத் தான் இருந்திருக்கின்றனர். மற்ற பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளை ஒப்பிடுகையில் சிலாங்கூரில் பிகேஆர் 13 இடங்களை மட்டுமே வைத்துள்ளது. எனவே மந்திரி பெசார் பதவி கேட்டு கோரிக்கை வைப்பதை பிகேஆர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் நல்ல தீர்வைப் பெற நேற்று சுல்தானை சந்தித்தார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம். அச்சந்திப்பில் காலிட்டை மந்திரி பெசார் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் படி சுல்தான் அறிவுறுத்தினார்.

மேலும், புதிய சிலாங்கூர் மந்திரி பெசார் பதவிக்கு பக்காத்தான் கூட்டணிக்கட்சிகள் இரண்டுக்கும் மேற்பட்ட பெயரை முன்மொழிய வேண்டும் என்றும் சுல்தான் வலியுறுத்தினார்.