Home 13வது பொதுத் தேர்தல் அஜிஸான் கெடா தேர்தலில் நிற்பார் -பாஸ்

அஜிஸான் கெடா தேர்தலில் நிற்பார் -பாஸ்

598
0
SHARE
Ad

azizan

கெடா, பிப்.22- கெடா மந்திரி புசார் (படம்) உடல் நலப் பிரச்னைகளை எதிர்நோக்கிய போதிலும் வரும் பொதுத் தேர்தலில் அவரை நிறுத்துவது எனப் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் முடிவு செய்துள்ளது.

அஜிஸானை கெடா மந்திரி புசாராக பாஸ் முன்மொழியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அப்துல் ஹாடி,  வேட்பாளர் நியமன நாளன்று அது அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அஜிஸானுடைய உடல் ஆரோக்கியப் பிரச்னைகளும் பக்காத்தான் ராக்யாட் உறுப்புக் கட்சிகளுடன் அடிக்கடி மோதலை ஏற்படுத்திய அவருடைய தலைமைத்துவப் பாணியும் கெடா பாஸ்-க்கு அவர் மீண்டும் தலைமை தாங்க பாஸ் அனுமதிக்குமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

அவர் 2005ம் ஆண்டு இருதய நாள அறுவைச் சிகிச்சை செய்து கொண்டார். அவருக்கு 2011ல்  அஞ்சியோ பிலாஸ்தி (angioplasty) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.