Home உலகம் ஈரான் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுகிறது : ஐ.நா. அணு அமைப்பு எச்சரிக்கை

ஈரான் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுகிறது : ஐ.நா. அணு அமைப்பு எச்சரிக்கை

581
0
SHARE
Ad

iranவியன்னா, பிப். 22-  ஈரானில் அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக அமெரிக்க உள்ளிட்ட மேலைநாடுகள் கூறி வருகின்றன.

ஐ.நா. சபையும் ஈரான் தனது அணு ஆயுத நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன.

உலக வல்லரசு நாடுகள் அணு ஆயுதக்குறைப்பு குறித்து வரும் 26-ம் தேதி ஈரானுடன் கஜகஸ்தானில் பேசவுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஈரான் தனது முக்கிய அணுசக்தி நிலையங்கள் ஒன்றில் அடுத்த தலைமுறை அணுசக்தி உபகரணங்களை நிறுவுவதாக ஐ.நா. அணு முகமை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சி கூறியிருப்பதாவது:-

கடந்த 6-ம் தேதி, ஈரான் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தில், ஐ.ஆர்.-2எம் செண்ட்ரிபியூசு என்ற அதிநவீன அணுசக்தி உபகரணத்தை நிறுவத் தொடங்கியதை ஐ.நா. அணு நிறுவனம் கவனித்துள்ளது.

செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை 5 சதவிகிதம் பயன்படுத்தும் ஈரானின் நடான்ஸ் அணுசக்தி நிலையத்தை விட, 20 சதவிகிதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை பயன்படுத்தும் போர்டோ அணுசக்தி நிலையம் உலக மக்களை பெரிதும் கவலையடைய வைத்திருக்கிறது.

மேலும் இது  அணுஆயுதம் தயாரிக்க தேவையான, 90 சதவிகிதம் அளவிற்கு அது நெருங்கிவருவதும் கவலை அளிக்கிறது.