கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – கெடா மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி, சனிக்கிழமை, நல்லதோர் வீணை செய்தே என்ற தலைப்பில் இலக்கிய பெருவிழா நடைபெறவுள்ளது.
லூனாசிலுள்ள தியான ஆஸ்ரமத்தில் காலை 8.30 மணி தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில், மகாகவி பாரதியாரின் பாடல்கள் மற்றும் படைப்புகள் பற்றியும், அவரின் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான நிகழ்வுகளை நினைவு கூறும் விதமாகவும், மலேசியாவின் பிரபல இலக்கியவாதிகள் பேசவுள்ளனர்.
இது தவிர பாரதி பற்றிய பட்டிமன்றம், குறுநாடகம் என இன்னும் பல சிறப்பான நிகழ்வுகளும் இந்த விழாவில் நடத்தப்படவுள்ளது.
இந்த நிகழ்வை லூனாஸ் தியான மன்றமும், பாரதி இலக்கிய நெஞ்சங்களும் இணைந்து நடத்தவுள்ளது.
மலேசியாவின் பிரபல இலக்கியவாதிகளான சுவாமி பிரம்மானந்தா, விரிவுரையாளர்கள் தமிழ் மாறன், இரா.சேதுபதி, எழுத்தாளர் கோ.புண்ணியவான் ஆகியோர் பாரதி பற்றி பல்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர்.
சுவாமி பிரம்மானந்தா, ‘நின்னைச் சரணடைந்தேன்’ என்ற தலைப்பிலும், தமிழ்மாறன், ‘பாரதி கவிதைச் சாரல்’ என்ற தலைப்பிலும், இரா.சேதுபதி, பாரதி இலக்கியப் பேருரையையும், கோ.புண்ணியவான் பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் படைப்பைப் பற்றிய விமர்சனமும் செய்யவுள்ளார்கள்.
முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இவ்விழாவில், ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வருகையாளர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் தேநீர் உபசரிப்பு என அனைத்து வசதிகளையும் ஏற்பாட்டுக் குழுவினர் செய்யவுள்ளனர்.
தேதி : 30-8-14 சனிக்கிழமை
நேரம் : காலை 8.30 முதல் மாலை 5.00 வரை
இடம் : தியான ஆஸ்ரமம், லுனாஸ், கெடா.