Home கலை உலகம் கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினி வழிபாடு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் ரஜினி வழிபாடு!

709
0
SHARE
Ad

rajiniகொல்லூர், ஆகஸ்ட் 27 – கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தினார். ரஜினிகாந்த் இப்போது தனது லிங்கா படப்பிடிப்புக்காக கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் தங்கியுள்ளார்.

இன்னும் மூன்று வாரங்கள் வரை ஷிமோகாவைச் சுற்றியுள்ள இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த நிலையில், தனக்கு கிடைத்த ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

rajini-kollur1கோயிலுக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். கோயிலின் நிர்வாக அலுவலர் எல் எஸ் மூர்த்தி, கண்காணிப்பாளர் ராமகிருஷ்ண அடிகா ஆகியோரும் ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றனர்.