Home இந்தியா மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு!

மோடியின் கருத்துக்கு வைகோ எதிர்ப்பு!

497
0
SHARE
Ad

NarendraModiசென்னை, ஆகஸ்ட் 27 – ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஈழத் தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு வைகோ அளித்த பேட்டியில் கூறியதாவது, இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது போர் தொடுத்து, ஏராளமான மக்களை கொன்று குவித்த ராஜபக்சேவை, ஐ.நா. மன்றம் அழைத்ததற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய விசாரணை அதிகாரிகளுக்கு இலங்கை அரசு விசா வழங்க மறுத்துள்ளது. போர் குற்றவாளியான ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்ததை ஐ.நா. மன்றம் திரும்ப பெற வேண்டும். அப்போதுதான், ஐ.நா.வின் சுயமரியாதை காக்கப்படும்.

#TamilSchoolmychoice

இதை ஐ.நா. மன்றத்திற்கு நான் வேண்டுகோளாக வைக்கிறேன். மத்திய ஆட்சியாளர்கள் தனி ஈழத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை. ஆனால், இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை, நீதி கிடைக்க வேண்டும் என்றால் சுதந்திர தனி ஈழம் அமைந்தால்தான் முடியும்.

எனவே, உலக அளவில் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனி ஈழம் அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். தனி ஈழம் அமைந்தால்தான் இலங்கை தமிழர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படும் என வைகோ கூறினார்.