Home உலகம் சிரியாவில் அமைதிப்படை வீரர்களை புரட்சியாளர்கள் கைது செய்துள்ளனர் – ஐ.நா தகவல்

சிரியாவில் அமைதிப்படை வீரர்களை புரட்சியாளர்கள் கைது செய்துள்ளனர் – ஐ.நா தகவல்

551
0
SHARE
Ad

iraqசிரியா, ஆகஸ்ட் 29 – சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த மூன்று வருடங்களுக்கும் மேலாக அங்கு புரட்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அல்கொய்தா தொடர்புடைய நுஸ்ரா முன்னணி உட்பட பல்வேறு சிரிய கிளர்ச்சிக்குழுக்கள் கோலன் ஹைட்ஸ் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டு வருகின்றன.

இவர்களில் ஒரு குழுவினர் கடந்த புதன்கிழமை அன்று சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் உள்ள பிரச்சனைக்குரிய எல்லைப்பகுதியின் ஒரு இடத்தைக் கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

Rise-Al-qaeda-Syriaஇவ்வாறான ஒரு உச்சகட்ட சண்டையின்போது இந்த வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா பொதுச் செயலர் பான்-கி-மூனின் அலுவலகத் தகவல் அறிக்கை தெரிவிக்கின்றது. இவர்கள் அனைவரும் தெற்குப் பகுதியில் இருப்பதாகவும், பிஜித் தீவின் வீரர்கள் என்றும் இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 81 வீரர்கள் அர்ருவைஹினா மற்றும் புரைகா பகுதிகளுக்கு இடையிலிருந்து வெளியேறமுடியாமல் தடுக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

வீரர்களின் இந்த நிலைமை குறித்து தாங்கள் மிகவும் கவலைப்படுவதாக ஐ.நா தகவல் தொடர்பாளரான ஸ்டீபன் டுஜாரிக் கூறினார். போராளிக் குழுக்களைக் கட்டுப்படுத்துவது யாரென்பது புரியவில்லை.

article-2654861-1EAAC91900000578-278_964x544சில குழுக்கள் தங்களை அல்-நுஸ்ரா அணியுடன் இணைந்திருப்பதாக சுய அடையாளத்தை வெளிப்படுத்தியுள்ளன. எனவே மாநிலம் சாராத அணிகளுடன் தொடர்புகொண்டு அமைதிப்படை வீரர்களின் விடுதலைக்குத் தாங்கள் மிகவும் முயற்சி செய்துவருவதாக டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

சிரியா மற்றும் இஸ்ரேல் இடையில் கடந்த 1973ஆம் ஆண்டு நடைபெற்ற போரினைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு ஏற்பட்ட குடியேற்ற ஒப்பந்தத்தைக் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுவரும் வீரர்கள் இவர்கள் என்பதனை ஐ.நா குறிப்பிட்டுள்ளது.