Home உலகம் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மலேசியா வருகிறார்!

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் மலேசியா வருகிறார்!

622
0
SHARE
Ad

CRICKET-AUSTRALIA-WC2015மெல்போர்ன், ஆகஸ்ட் 30 -ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் அடுத்த வாரம் மலேசியா வருகிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘நானும் தொழிலதிபர்கள் குழுவினரும் செப்டம்பர் 4-ம் தேதி முதல் 3 நாட்கள் மலேசியா மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறோம்.

பிரதமராக நான் மலேசியா, இந்தியாவுக்கு செல்வது இது முதல் முறையாகும். தலைநகர் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு சென்று இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தக தொடர்புகளை மேலும் பலப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.

இந்த பயணம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான நல்லுறவுகள் மேம்படும் என்று நம்புகிறேன்’ அதேபோல் மலேசியாவுடனும் நல்லுறவுகள் மேம்படும் என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலிய பிரதமர் வருகையின்போது இரு நாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.