Home நாடு 6000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யத் தயாராகும் மாஸ்!

6000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்யத் தயாராகும் மாஸ்!

500
0
SHARE
Ad

MASகோலாலம்பூர், செப்டம்பர் 02 – நாட்டின் முக்கிய விமான போக்குவரத்து நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க 6,000 ஊழியர்களை வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 6 மாதங்களில் மாஸ் நிறுவனம் சந்தித்த இரு பெரும் விமானப் பேரிடர்களும், அந்நிறுவனத்தை பெரும் பொருளாதார நெருக்கடியில் ஆழ்த்தி உள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக வாடிக்கையாளர்கள் மத்தியில் நன்மதிப்பை இழந்து வரும் மாஸ் நிறுவனத்திற்கு இந்த விபத்துகள் மேலும் அவப் பெயரை ஏற்படுத்தி உள்ளன.

இந்நிலையில் 69 சதவீத பங்குகளை கொண்டிருந்த கசானா நேசனல் நிறுவனம் அனைத்து பங்குகளையும் வாங்க இருப்பதாக அறிவித்துள்ளது. மேலும், 6 பில்லியன் ரிங்கெட்கள் மதிப்புள்ள மறு சீரமைப்பு திட்டத்தின் முதற்கட்டமாக விமான நிறுவனத்தின் பெயர் மாற்றம், 6,000 ஊழியர்களின் வேலை நீக்கம் உள்ளிட்ட சில திட்டங்களை கொண்டிருப்பதாக என கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

கசானாவின் இந்த முடிவால் 20,000 ஊழியர்கள் வேலை செய்யும் மாஸ் நிறுவனத்தில் 30 சதவீத ஊழியர்கள், தங்கள் வேலையை இழப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.