Home இந்தியா அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி! இன்று அறுவை சிகிச்சை!

அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி! இன்று அறுவை சிகிச்சை!

490
0
SHARE
Ad

arun-jaitleyபுது டெல்லி, செப்டம்பர் 2 – மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உடல் நலக் குறைவு காரணமாக நேற்று மாலை டெல்லி சாகெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இன்று அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. அருண் ஜெட்லியின் உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்தனர்.

அதன்படி, இன்று அருண் ஜெட்லிக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. எனினும், இந்த அறுவை சிகிச்சை எதற்காக என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. அவர் தற்போது நலமாகவே உள்ளார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice