மாஸ்கோ, செப்டம்பர் 2 – உக்ரேனில் அமைதி திரும்ப கிழக்கு உக்ரேன் பகுதிக்கு மாநில அந்துஸ்து வழங்க வேண்டும் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
கிழக்கு உக்ரைனுக்கு தன்னாட்சி அதிகாரம் கேட்டு கடும் போராட்டம் நடத்தி வரும் ரஷ்ய ஆதரவாளர்கள் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றி உள்ளனர். அதனை ரஷ்யாவுடன் இணைக்க பெரும் சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களை ஒடுக்க உக்ரேன் இராணுவம் முயற்சி செய்து வந்தாலும், போராட்டக்காரர்களுக்கு ரஷ்யா ஆயுதம் மற்றும் பண உதவி செய்து வருவதால அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்து வருகின்றது.
இதற்கிடையே கிழக்கு உக்ரரேனில் அமைதி நிலவ பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரஷ்யா மற்றும் உக்ரேன் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
ரஷ்ய கிளர்ச்சியாளர்கள் பங்கேற்பது குறித்த தகவல்கள் இல்லை. இந்த நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில்,
“அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் முடிவு கட்ட கிழக்கு உக்ரைனுக்கு மாநில அந்துஸ்து வழங்க வேண்டும்.” “அதுவே அங்கு வாழும் மக்களின் நோக்கமாகும். மேலும் அது அவர்களுக்கு சட்ட பாதுகாப்பை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.