Home வணிகம்/தொழில் நுட்பம் கியூபாவில் உலக நாடுகள் இறக்குமதி செய்யத் தடை!

கியூபாவில் உலக நாடுகள் இறக்குமதி செய்யத் தடை!

514
0
SHARE
Ad

bayofpigsஹவானா, செப்டம்பர் 02 – கியூபாவில் நேற்று முதல் உலக நாடுகள் செய்து வந்த இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தக நோக்கத்தோடு மக்கள் வாங்கும் பொருட்களுக்கு வரி விதிக்கவும் அங்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

கரிபியன் தீவுகளில் ஒன்றான கியூபாவில் அத்தியாவசியப் பொருட்களும் விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அவை பெரும்பாலும் மோசமான தயாரிப்பாகவே உள்ளன.

இதனால் அங்கு வாழும் மக்கள் ஆண்டுதோறும் அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.

#TamilSchoolmychoice

கடந்த 2009-ம் ஆண்டு முதல் அங்கு இறக்குமதிக்கான தடைகள் விலக்கப்பட்டபின் ஆண்டுதோறும் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட அன்னியப் பொருட்கள் வந்துகொண்டிருந்தன.

cunewzஆனால் அந்த வர்த்தகம் நேற்று முதல் மீண்டும் தடை செய்யப்பட்டது. இது சாதாரண மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது. இது பற்றி அந்நாட்டு அரசு கூறுகையில்,

“இறக்குமதிக்கான இந்த தடை நடைமுறைக்கு வர முக்கிய காரணம் அதனை வர்த்தக நோக்கத்தோடு பயன்படுத்திக் கொள்ளுபவர்களைக் கட்டுப்படுத்தவே ஆகும்” என்று கூறியுள்ளது.

உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு இந்த திட்டங்கள் கொண்டுவரப்பட்டாலும், உயர்தரம் கொண்ட நுகர்வோர் பொருட்களைத் மக்கள் பெறும் ஒரு நடைமுறை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கருதப்படுகின்றது.