Home இந்தியா 24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான்!

24-ம் தேதி செவ்வாய் கிரகத்தை அடைகிறது மங்கள்யான்!

469
0
SHARE
Ad

mars-missionபெங்களூர், செப்டம்பர் 3 – செவ்வாய் கிரகத்துக்கு இந்தியாவின் சார்பில்  அனுப்பப்பட்டுள்ள மங்கள்யான் விண்கலம் 300 நாள் பயணத்தை  முடித்துள்ளது. திட்டமிட்டபடி வரும் 24-ம் தேதி அது செவ்வாய் கிரகத்தை  அடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

450 கோடி ரூபாய் செலவிலான மங்கள்யான் திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 5-ம் தேதி  ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  மொத்தம் 68 கோடி கி.மீ. தூர பயணத்தில் தற்போது 62.2 கோடி கி.மீ.  பயணத்தை அது முடித்துள்ளது.

ISRO-MANGALYAANநீள்வட்டப் பாதையில் பயணிக்கும்  மங்கள்யான், பூமியில் இருந்து 19.9 கோடி கி.மீ. தூரத்தில் தற்போது  உள்ளது. பூமிக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் இடையேயான சராசரி  தொலைவு 22.5 கோடி கிலோ மீட்டர் ஆகும்.