Home வாழ் நலம் உஷ்ணக் கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக் கள்ளி!

உஷ்ணக் கட்டிகளை குணப்படுத்தும் சப்பாத்திக் கள்ளி!

958
0
SHARE
Ad

Prickly_pearசெப்டம்பர் 3 – சப்பாத்திக்கள்ளி. இது ஒரு பாலைவனத்தாவரம் – வறண்ட பகுதியில் செழித்து, வளர்ந்து காணப்படும் ஒருவகை தாவரம்தான் சப்பாத்திக்கள்ளி.

நமது  இரத்தத்தில் பலவிதமான அணுக்கள் (செல்கள்), கனிம, கரிமப்பொருட்கள் கலந்துள்ளன. இவை உடல் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்தை தருவதுடன் அணு விருத்திக்கும் பெரிதும் உதவுகின்றன.

இந்த வகை பல கனிம வளங்களையும், வைட்டமின்களையும் சப்பாத்திக்கள்ளி தன்னிடத்தில் கொண்டுள்ளது.

#TamilSchoolmychoice

‘டிபன்ஸ் மெக்கானிசம்’ என்று சொல்லப்படும் செல்களின் தற்காப்பு செயலுக்கு இரத்த அணுக்கள் பெரிதும் உதவுகின்றன. உணவுப்பாதை, மூச்சுப்பாதை,  தோல் போன்றவற்றின் வாயிலாக நமது உடலுக்குள் நுழையும் நுண்கிருமிகள் இரத்த அணுக்களுடன் சண்டையிடும் போது அழிந்துவிடுகின்றன.

monsoon_prickly-pearஅல்லது இரத்த அணுக்களால் தூக்கியெறிப்பட்டு தோலின் வாயிலாக வெளியேற்றப்படுகின்றன. இவை வியர்வை துவாரங்களை அடைத்து கட்டிகளை உண்டு பண்ணுகின்றன.

அதுமட்டுமின்றி தோலின் வாயிலாக உடலுக்குள் செல்லும்  நுண்கிருமிகளும் இரத்தத்தை சென்றடைய முடியாமல் தோலிலேயே தங்கி ஆரம்பத்திலேயே அழிக்கப்பட்டு தோலில் கட்டிகளாக மாறுகின்றன.

இவ்வாறு தோன்றும் கட்டிகள் உஷ்ண கட்டிகள், பிளவை கட்டிகள் என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

Prickly Pearசப்பாத்திக் கள்ளிகள், கிருமிகளை அழித்து இரத்தக் கட்டிகளை கரைக்கும் தன்மையுடையவை. சப்பாத்திக் கள்ளியின் இலைத்தண்டை பிளந்து, வெளிப்புறமுள்ள முட்களை நீக்கி, உட்புறமாக சிறிது மஞ்சளை தடவி, அனலில் வாட்டி,  கட்டிகளின் மேல் இறுக்கமாக கட்டி வைத்து வர ஆரம்ப நிலையிலுள்ள கட்டிகள் விரைவில் உடைந்து புண் எளிதில் ஆறும்.

புண் ஆற தாமதமானால்  மஞ்சளை தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வர விரைவில் குணமுண்டாகும்.