Home கலை உலகம் வரிசையாக தோல்வியை சந்திக்கும் சமந்தா!

வரிசையாக தோல்வியை சந்திக்கும் சமந்தா!

655
0
SHARE
Ad

samanthaசென்னை, செப்டம்பர் 4 – தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. தெலுங்கில் சமந்தா நடித்த படங்கள் தொடர்ச்சியாக வெற்றியடைந்தது.

அதேபோல் தமிழிலும் ஒரு நல்ல இடத்தை தக்க வைக்க அடுத்தடுத்து சூர்யா, விஜய், விக்ரம் என முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தமனார்.

சமீபத்தில் சமந்தா சூர்யாவுடன் நடித்த அஞ்சான் படம் வெளிவந்து அடுத்த வாரத்திற்குள்ளேயே வசூல் அடங்கி விட்டது. ஆனால் படக்குழுவினர் படம் மகா வெற்றி என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் என்.டி.ஆருடன் ‘ரபாசா’ என்ற படத்தில் நடித்து வந்தார் சமந்தா.

#TamilSchoolmychoice

தெலுங்கில் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருந்த சமந்தாவுக்கு இப்படம் கைகொடுக்கவில்லை. இத்தனைக்கும் ‘ரபாசா’ படத்தில் சமந்தா கவர்ச்சியா நடித்திருந்தாராம்.

இதனால் அஞ்சான் படத்தில் நடித்த ராசியோ என்னவோ சமந்தாவுக்கு ‘ரபாசா’ படமும் தோல்வியடைந்து விட்டது என்று சினிமா வட்டாரங்களின் பேச்சு நிலவுகின்றது.