Home உலகம் போர் குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை!

போர் குற்ற விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை முன்னாள் இராணுவ வீரர் தற்கொலை!

581
0
SHARE
Ad

firemonkகொழும்பு, செப்டம்பர் 5 – இலங்கையில் ஐ.நா நடத்தும் மனித உரிமை மீறல் குறித்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிகட்ட போரின்போது சரணடைந்த நூற்றுக்கணக்கான வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதாக உலக அளவில் குற்றம் சாட்டப்பட்டது.

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் ஐ.நா.வின் மனித உரிமை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தின. இதனைத் தொடர்ந்து போர் குற்ற விசாரணை நடத்த ஐ.நா. சபை உத்தரவிட்டது.

#TamilSchoolmychoice

ஐ.நா.வின் விசாரணைக்கு இலங்கை அரசு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர் அஜீத் ரோகணா (73) என்பவர் போர் குற்ற விசாரணையை எதிர்த்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளது.

இது தொடர்பாக இலங்கை அரசு வட்டாரங்கள் கூறுகையில், “அஜீத் ரோகணா என்ற முன்னாள் இராணுவ வீரர், அதிபர் ராஜபக்சேவின் அரசு குடியிருப்பின் அருகே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை மருத்துவமனையின் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஐ.நா. சபையின் முன்னாள் மனித உரிமை தலைவர் நவீபிள்ளை வற்புறுத்தல் காரணமாக இலங்கை மீது போர் குற்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் தீக்குளித்துள்ளார். இது தொடர்பான மரண வாக்கு மூலமும் இலங்கை அரசிடம் உள்ளது” என கூறியுள்ளன.