Home நாடு மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் “சைவ உணவு மற்றும் கேளிக்கை சந்தை”

மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் ஏற்பாட்டில் “சைவ உணவு மற்றும் கேளிக்கை சந்தை”

617
0
SHARE
Ad

Hindu Dharma Mamandram Logo 440 x 218கோலாலம்பூர், செப்டம்பர் 8 – மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் கோலாலம்பூர் கிளையின் ஏற்பாட்டில், வரும் செப்டம்பர் 14-ம் தேதி, காலை 9 மணி தொடங்கி மாலை 5 மணி வரை, தலைநகர் பிரிக்பீல்ட்சில் “சைவ உணவு மற்றும் கேளிக்கை சந்தை” நடைபெறவுள்ளது.

இந்த விழாவில் பல வகைகளில் சைவ உணவுகள் படைக்கப்படவுள்ளன. மேலும் கலாசார விளையாட்டுகள், குழந்தைகளுக்கான விளையாட்டுகள் என பல்வேறு கலகலப்பான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

நிதி திரட்டுவது மற்றும் பொதுமக்களுடன் நல்லிணக்கத்தை இணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் சைவ உணவு விரும்பிகள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைய வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வு குறித்த மேல் விபரங்களுக்கு,

திரு.சரவணன் – 013-3102011