Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: இசைத்துறையிலும் கலக்கும் எஞ்சினியர் பாலன்ராஜ்!

மலேசியக் கலையுலகம்: இசைத்துறையிலும் கலக்கும் எஞ்சினியர் பாலன்ராஜ்!

848
0
SHARE
Ad

Balanrajகோலாலம்பூர், செப்டம்பர் 10 – எஞ்சினியரிங் படிப்பிற்கும் கலைத்துறைக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்திய சினிமா உலகில் இன்று முன்னணி இயக்குநர்களாக, நடிகர்களாக இருப்பவர்கள் பலர் எஞ்சினியரிங் முடித்தவர்கள் தான்.

அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ படித்தவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர். அதே போல், ஆங்கிலப் படங்களின் பாணியில் மிகவும் ஸ்டைலாக சினிமாவை இயக்கி தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு கொண்டு சென்ற இயக்குநர் கௌதம் வாசுதேவன் மேனனும் எஞ்சினியரிங் முடித்தவர் தான்.

அந்த வகையில் மலேசியாவிலும், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் முடித்த ஒருவர் இசையமைப்பாளராக உருவாகியிருக்கிறார். ஜோகூர் மாநிலம் செகாமட்டிலுள்ள தோட்டப்புறத்தில் வளர்ந்த இவர், இசை மீது கொண்ட ஆர்வத்தினால் தலைநகருக்கு வந்து கடந்த 2008 -ம் ஆண்டு முதல் இசைத்துறையில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார்.

#TamilSchoolmychoice

இதுவரை, மண்ணின் மைந்தர்கள், நண்பா, ரோபோட், மாயங்கள் ஆகிய தனிப்பாடல்களை தனது நண்பர்களான தியாகு முருகேசன், ஜெகதீசன் ஆகியோருடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

சிறந்த பாடல் எழுதும் திறமையும் கொண்ட பாலன்ராஜ், நண்பா, மாயங்கள் போன்ற பாடல்களுக்கு தானே வரிகள் எழுதியுள்ளார். விரைவில் புதிய பாடல் தொகுப்பு ஒன்றையும் பாலன்ராஜ் வெளியிடவுள்ளார்.

நாடு, மொழி, மதம் என எல்லாவற்றையும் கடந்து தான் இவ்வுலகில் மனிதநேயத்தையே மிகவும் விரும்புவதாகவும், அதை தான் தொடர்ந்து தனது பாடல்களில் வலியுறுத்தி வருவதாகவும் பாலன்ராஜ் தெரிவித்தார்.

– ஃபீனிக்ஸ்தாசன்

பாலன்ராஜ் இசையமைத்த பாடல்களை கீழ்காணும் இணைப்பின் வழியாகக் காணலாம்:

http://www.youtube.com/channel/UCM-qBtXlibJW4v3_yVr6V8Q