Home கலை உலகம் சினிமாவை விட்டு விலக போகிறேன் – சமந்தா அதிரடி!

சினிமாவை விட்டு விலக போகிறேன் – சமந்தா அதிரடி!

650
0
SHARE
Ad

samanthaசென்னை, செப்டம்பர் 10 – ’அஞ்சான்’ படத்திற்கு பிறகு ‘கத்தி’ படத்தில் ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டிருக்கும் சமந்தா சமீபத்தில் ஒரு பேட்டியில் சினிமாவை விட்டு விலக போகிறேன் என கூறியது ரசிகர்களுக்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களும் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் இதில் சிறிதளவு கூட அவருக்கு வருத்தம் இல்லையாம், ஏனென்றால் தொடர்ந்து பல படங்கள் வந்து கொண்டே தான் இருக்கிறது.

வெற்றி, தோல்வி வரும் போகும் என கூறியுள்ளார் சமந்தா. இந்நிலையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதில் ‘ சினிமாவில் நல்ல நிலையில் இருக்கும் போதே நான் விலகி விடுவேன், இங்கு யாரும் திருமணத்திற்கு பிறகு பெண்களை ரசிப்பதில்லை’ என்று கூறி அனைவக்கும் அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார் சமந்தா.