குப்பர்ட்டினோ (அமெரிக்கா) செப்டம்பர் 11 – அமெரிக்க நேரப்படி செப்டம்பர் 9ஆம் நாள் காலையில் உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சாதனங்களின் அறிமுக விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள குப்பர்ட்டினோ நகரில், கோலாகலமாக நடந்தேறியது.
உலகம் முழுவதும் கையடக்கக் கருவிகளின் வழியும், இணையத்தின் வழியும் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல உலகத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த நிகழ்வை நேரடியாக ஒளிபரப்பின.
அந்த அறிமுக நிகழ்ச்சியின் வண்ணமயமான படங்களை இங்கே கண்டு மகிழலாம்:
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் ஆகியவற்றை அறிமுகப்படுத்தி உரையாற்றுகின்றார். பிளிண்ட் சென்டர் (Flint Center for the Performing Arts) எனப்படும் இதே அரங்கில்தான் 1984ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மெக்கின்தோஷ் கணினியை ஆப்பிள் நிறுவனத்தின் அன்றைய தலைமைச் செயல் அதிகாரி காலமான ஸ்டீவ் ஜோப்ஸ் அறிமுகப்படுத்தினார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தொழில் நுட்பப் பிரிவுக்கான உதவித் தலைவர் கெவின் லிஞ்ச் ஆப்பிள் வாட்ச் எனப்படும் கைக்கெடிகாரத்தை அறிமுகப்படுத்தி உரை நிகழ்த்துகின்றார்.
புதிய ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் – அவற்றின் விலைகளும், சிறப்பம்சங்களும் விளக்கப்படுகின்றன.
ஆப்பிள் பே எனப்படும் – ஐபோன்களின் வழியாக கட்டணம் செலுத்தும் நடைமுறை ஒன்றையும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. ஆப்பிள் நிறுவனத்தின் இணைய மென்பொருள் சேவை பிரிவின் (Internet Software and Services) உதவித் தலைவர் எடி கியூ அந்த நடைமுறை குறித்து விளக்குகின்றார்.
ஆப்பிள் பே நடைமுறையின் சில குறிப்பிடத்தக்க அம்சங்களை ஆப்பிள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் விளக்குகின்றார்.
படங்கள் – EPA