Home உலகம் அமெரிக்காவை மிரட்டுவோர் எங்கும் பத்திரமாக இருக்க முடியாது : ஒபாமா

அமெரிக்காவை மிரட்டுவோர் எங்கும் பத்திரமாக இருக்க முடியாது : ஒபாமா

666
0
SHARE
Ad

U.S. President Obama delivers speech in Mexico Cityஅமெரிக்கா, செப்டம்பர் 11 – ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான கூட்டணிக்கு தலைமை ஏற்கத் தயார் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை விரைவில் ஒழிப்போம் என வாஷிங்டனில் ஒபாமா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும் கண்டறிந்து வேட்டையாடுவோம் என ஒபாமா கூறினார். ஈராக், சிரியா மீது நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டோம்.

அமெரிக்காவை மிரட்டுவோர் உலகில் எந்த இடத்திலும் பத்திரமாக இருக்க முடியாது என்றும் ஒபாமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.