கோலாலம்பூர், செப்டம்பர் 11 – 2015-ம் ஆண்டில் அரசு, பொருள்சேவை வரியினை செயல்படுத்த இருப்பதால் மலேசியாவில் கார்களின் விலைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட இருப்பதாக மலேசிய வாகனங்களுக்கான ஒருங்கிணைந்த அமைப்பு கூறியுள்ளது.
இது குறித்து எம்எஐ என்ற மலேசிய வாகனக் கழகம் (Malaysian Automotive Institute) அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி மதானி சகாரி கூறுகையில், “அரசு செயல்படுத்த இருக்கும் ‘பொருட்கள் மற்றும் சேவைகள்’ (GST)-ன் வரியினைப் பொறுத்து கார்களின் விலைகளில் பெரும் மாற்றங்கள் இருக்கும். பெரும்பாலான கார்களின் விலைகளில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் அளவிற்கு சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், விலை இறக்கம் காரணமாக நிறுவனங்களுக்குள் கடும் போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. இது மேலும், விலை இறக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
இந்த வருடத்தின் இறுதியில் 670,000 கார்கள் விறபனையாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், 2015-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 700,000-ஐ தாண்டும் என கணக்கிடப்பட்டுள்ளது.