Home வணிகம்/தொழில் நுட்பம் பினாங்கு- கிராபிக்கு இடையே ஃபயர்ஃபிளை ஏர்லைன்சின் புதிய விமான சேவை தொடக்கம்!

பினாங்கு- கிராபிக்கு இடையே ஃபயர்ஃபிளை ஏர்லைன்சின் புதிய விமான சேவை தொடக்கம்!

560
0
SHARE
Ad

pesawat-fireflyகோலாலம்பூர், செப்டம்பர் 12 – மலேசியா ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான ‘ஃபயர்ஃபிளை’ (Firefly) முதன் முறையாக தெற்கு தாய்லாந்தின் சுற்றுலாத் தளமான கிராபி நகருக்கு விமான சேவை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த விமான சேவை பினாங்கு தேசிய விமான நிலையத்தில் இருந்து தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ் நிறுவனம் 100 சதவீத பங்குகளை வகிக்கும் துணை நிறுவனமான ஃபயர்ஃபிளை நிறுவனம், மலேசியாவின் அண்டை நாடுகளான சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு விமான சேவை வழங்கி வருகின்றது. மாஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இருந்தாலும், அதனிலிருந்து முற்றிலும் வேறுபட்டு தனித்த மேலாண்மையைக் கொண்டுள்ளது.

தற்போது தொடங்க இருக்கும் இந்த புதிய விமான போக்குவரத்து பற்றி அதன் தலைமை நிர்வாக அதிகாரி இக்னேசியஸ் ஆங் கூறியுள்ளதாவது:-

#TamilSchoolmychoice

“பினாங்கு, கிராபி நகருக்கு இடையே தொடங்க இருக்கும் இந்த விமான போக்குவரத்து ஒரு வாரத்தில் மூன்று முறை மட்டுமே நடைபெறும். இதற்காக 72 இருக்கைகள் கொண்ட ‘ஏடிஆர் டர்போப்ராப்’ (ATR 72-600 turboprop) விமானம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இதன் மூலம் பினாங்கிலிருந்து தாய்லாந்திற்கு 10 வாராந்திர விமான சேவை வழங்கப்படுகின்றது” என்று கூறியுள்ளார்.

அனைத்து விதமான விமான சேவைகளுக்கும் ஒரு வழி கட்டணமாக 147 ரிங்கெட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.