Home உலகம் எபோலா பாதித்த நாடுகளின் விமான சேவைகளுக்காக ஐநா நிதி உதவி!

எபோலா பாதித்த நாடுகளின் விமான சேவைகளுக்காக ஐநா நிதி உதவி!

557
0
SHARE
Ad

unஜெனிவா, செப்டம்பர் 12 – எபோலா நோய் தாக்குதல் காரணமாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், வர்த்தக விமான சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டது.

இதனால் அங்கு கடும் பொருளாதார இழப்பீடுகள் ஏற்பட்டன. இந்நிலையில் ஐ.நா.சபை, இழப்பீடுகளுக்கு ஈடு செய்யும் விதமாக அந்நாடுகளுக்கு சுமார் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் பரவிய எபோலா வைரஸ்தொற்று, அண்டை நாடுகளான லைபீரியா, சியரா, லியோன், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவியது.

#TamilSchoolmychoice

இதுவரை 2000-க்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கியுள்ள இந்த நோய் தாக்குதல் காராணமாக, மற்ற உலக நாடுகள் இந்த நாடுகளுக்குகான விமான சேவையை கணிசமான அளவில் குறைத்தன.

Ebola-storyவிமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டதால் அந்தப் பகுதிகளுக்குத் தேவையான சுகாதார ஊழியர்களை அனுப்புவதற்கும், மருந்துகள் மற்றும் சுகாதாரக் கருவிகள் விநியோகத்திற்கும் பெரும் சிரமம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஐ.நா. மனிதாபிமான விமான சேவைகளை எபோலா பாதித்த நாடுகளுக்கும் பயன்படுத்தும் வகையில் மத்திய அவசர நிதியத்திடமிருந்து 3.8 மில்லியன் அமெரிக்க டாலர்களை நிதி உதவியாக அந்நாடுகளுக்கு வழங்கி உள்ளது.

எபோலா நோய் தாக்கத்திற்காக இதுவரை 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.