Home தொழில் நுட்பம் மலிவுவிலை அண்டிரோய்டு 1திறன்பேசிகள் இந்தியாவில் வெளியீடு! 

மலிவுவிலை அண்டிரோய்டு 1திறன்பேசிகள் இந்தியாவில் வெளியீடு! 

480
0
SHARE
Ad

android-one

புது டெல்லி, செப்டம்பர் 17 – கூகுள் நிறுவனத்தின் விலை குறைந்த ‘அண்டிரோய்டு ஒன்’ (Android One) திறன்பேசிகள் முதன் முதலாக இந்தியாவில் நேற்று முன்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தியாவில் செல்பேசிகளின் பயன்பாடுகளும், திறன்பேசிகள் பற்றிய அறிவும் பெரும்பாலான மக்களுக்கு தெரிந்து இருந்தாலும், திறன்பேசிகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சாதாரண செல்பேசிகளை பயன்படுத்துவோரை விட குறைவு. இதற்கு முக்கிய காரணம் அதிக விலை. பெரும் நிறுவனங்களின் தரமான திறன்பேசிகள் இன்னும் நடுத்தர மக்களுக்கும், எளியோருக்கும் எட்டாத கனியாகவே இருந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

அதனால் குறிப்பிட்ட அந்த மக்களை குறிவைத்து கூகுள் நிறுவனம் மூன்று இந்திய நிறுவனங்களுடன் இணைந்து மலிவு விலை திறன்பேசிகளை அண்டிரோய்டு ஒன் என்ற பெயரின் கீழ் உருவாக்க முடிவு செய்தது. அதன்படி நேற்று கூகுள் தனது முதல் அண்டிரோய்டு ஒன் திறன்பேசிகளை வெளியிட்டது.

100 அமெரிக்க டாலர் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திறன்பேசிகளில், கூகுள் வழங்கும் பெரும்பான்மையான செயலிகள் மற்றும் சிறந்த வசதிகளைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது.

இந்த புதிய திறன்பேசிகள் குறித்து அண்டிரோய்டு பிரிவின் தலைவர் சுந்தர் பிச்சை கூறுகையில், “எங்கள் நிறுவனத்தின் இலக்கு மலிவு விலையில் சிறந்த திறன்பேசிகள்” என்று கூறியுள்ளார்.

இந்த திட்டத்திற்காக இந்தியாவின் ‘மைக்ரோமேக்ஸ்’ (Micromax), கார்பான் (Karbonn) மற்றும் ஸ்பைஸ் (Spice) நிறுவனங்கள் கூகுளுடன் கைகோர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.