திடீர் வயிற்று உபாதையால் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டார் கமல்ஹாசன். இதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடனடியாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
“மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியமே அவர் பூரண நலம் பெற்றார். கவலைப்பட ஒன்றுமில்லை. அவர் இன்று மாலையே வீடு திரும்புவார் என நினைக்கிறோம்,” என்று செவ்வாய்க்கிழமை மதியம் செய்தியாளர்களிடம் பேசிய நிகில் கூறினார்.
59 வயதான கமல்ஹாசன் தற்போது ‘பாபநாசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.நெல்லையில் நடைபெறும் இப்படத்தின் படப்பிடிப்பில் அவர் புதன்கிழமை முதல் பங்கேற்க உள்ளார்.
அவரது நடிப்பில் அடுத்து வெளியாக விஸ்வரூபம் படம் தயார் நிலையில் உள்ளது.