Home நாடு “தலையை வெட்டிக் கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ்.செயல் இஸ்லாத்துக்கு அவமானத்தை தேடித் தரும்” – துன் மகாதீர் கண்டனம்

“தலையை வெட்டிக் கொல்லும் ஐ.எஸ்.ஐ.எஸ்.செயல் இஸ்லாத்துக்கு அவமானத்தை தேடித் தரும்” – துன் மகாதீர் கண்டனம்

573
0
SHARE
Ad

Tun Mahathir கோலாலம்பூர், செப்டம்பர் 16-பத்திரிகையாளர்களின் தலையை வெட்டிக் கொல்வது இஸ்லாத்துக்கு அவமானத்தை தேடித் தரும் செயல் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

“ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் இச்செயல் இஸ்லாமியர்களுக்கு அவமானத்தையே தேடித்தரும் எனக் கருதுகிறேன். மேலும் இது இஸ்லாம் போதனைகளுக்கு எதிரானது. ஆனால் இத்தகைய கொடூரமான, வெறுக்கத்தக்க குற்றங்களைச் செய்யும் வகையில் மிகச் சுலபமாக, தவறாக வழிநடத்திச் செல்லப்படும் இளம் இஸ்லாமியரை,எளிதில் பாதிக்கப்படும் இஸ்லாமியரை யாராவது குற்றம் சொல்ல முடியுமா?”என்று தனது அகப்பக்கத்தில் மகாதீர் கேள்வி எழுப்பி உள்ளார்.

இத்தகைய அராஜகங்களில் போராளிகள் ஈடுபட என்ன காரணம்? என்றும் அவர் மேலும் கேட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“இத்தகைய வெறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடுமாறு இஸ்லாம் சொல்லவில்லை. தங்களைப் போலவே மதத்தைப் பின்பற்றுபவர்களை ஒடுக்கும் ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய சக்திகளை தடுக்க முடியாத கோபம் மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு இது. ஐரோப்பியர்களை எதிர்க்க எந்தவொரு இஸ்லாமிய நாட்டின் அரசாங்கத்துக்கும் துணிவில்லை,” என்று துன் மகாதீர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஐஎஸ்ஐஎஸ் இஸ்லாமிய இயக்கத்தினர் ஒவ்வொருவராக கழுத்தை அறுத்து கொலை செய்து வருகின்றனர்.