Home கலை உலகம் விக்ரமின் நடிப்பை கண்கலங்கி பாராட்டிய ரஜினி!

விக்ரமின் நடிப்பை கண்கலங்கி பாராட்டிய ரஜினி!

561
0
SHARE
Ad

aiசென்னை, செப்டம்பர் 20 – தமிழ் சினிமா நடிகர்கள் அனைவரும் ஆசைப்படுவது சூப்பர் ஸ்டார் என்ற இடத்திற்கு தான். அந்த சூப்பர் ஸ்டாரே ஒரு நடிகரை மனம் திறந்து பாராட்டினார் என்றால் சாதரண விஷயமா?.

‘ஐ’ படத்தின் முன்னோட்டத்தை (டிரைலரை) பார்த்த ரஜினிகாந்த் ‘” தமிழ் சினிமா , ஹாலிவுட் மட்டுமில்லை விக்ரம் மாதிரி ஒரு நடிகரை எங்கேயும் பார்த்ததில்லை. சீயான் விக்ரமை இனி ‘ஐ’ விக்ரம் தான் சொல்வாங்க. அந்த அளவுக்கு உடலை வருத்தி நடிக்கும் விக்ரமைப் பாராட்டுறேன். முன்னணி நடிகரான விக்ரமை வாழ்த்துகிறேன். ‘ஐ’ மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமா, இதயப்பூர்வமா வாழ்த்துறேன்” என்று கூறியுள்ளார் ரஜினி.

ஐ படத்தின் இசை-முன்னோட்ட அறிமுக விழாவில் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுடன் ரஜினியும் கலந்து சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.