Home கலை உலகம் ‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்’ – சதீஷூக்கு சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்ச்சி!

‘நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்’ – சதீஷூக்கு சமந்தா கொடுத்த இன்ப அதிர்ச்ச்சி!

749
0
SHARE
Ad

samanthaசென்னை, செப்டம்பர் 20 – ’கத்தி’ இசை வெளியீட்டு விழா நேற்று முந்தினம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ‘ஹிப் ஹாப் தமிழா’, மற்றும் அனிருத் பாடல்களால் வண்ணமயமாக ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி, மா.கா.பா ஆனந்த், சமந்தா, சதீஷ் ஆகியோரால் கலகலப்பாக மாறியது.

‘கத்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நகைச்சுவை நடிகர் சதீஷ் மேடையேறிப் பேசும்போது சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘காதலுக்கு மரியாதை’ வந்த புதிதில், விஜய்யின் முகம் போஸ்டரில் கோணலாகி விடக்கூடாது என போஸ்டர் ஒட்டுவேன் . அந்த அளவிற்கு அவருக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இப்போது அவருடனேயே நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை” என்றார்.

#TamilSchoolmychoice

நிகழ்ச்சி தொகுப்பாளினி சதீஷிடம், ‘உங்களுக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்களாமே? எப்படிப்பட்ட பெண் வேண்டும்?’ என கேட்க, ‘சமந்தா மாதிரி பெண் வேண்டும்’ என கூறினார் சதீஷ்.

இதைத் தொடர்ந்து பேசிய சமந்தா, ”அனைத்து முன்னனி நடிகைகளும் இந்த படத்தில் கதாநாயகி வாய்ப்புக்காக ஆசைப்பட்டிருப்பார்கள். ஆனால் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸுக்கு எனது நன்றிகள் ” என்றார்.

மேலும்,  ’சதீஷ் நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்’ என மகிழ்ச்சியாகக் கூறி சதீஷூக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் சமந்தா.