Home கலை உலகம் “சைமா” விருது விழாவில் – நடிகை தமன்னா (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 14)

“சைமா” விருது விழாவில் – நடிகை தமன்னா (பிரத்தியேகப் படங்கள் தொகுப்பு 14)

1358
0
SHARE
Ad

கோலாலம்பூர், செப்டம்பர் 17 – கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்ற சைமா – எனப்படும் தென்னிந்திய திரைப்பட அனைத்துலக விருதளிப்பு விழாவில் கலந்து வந்திருந்த பிரபல நடிகை தமன்னாவின் பிரத்தியேகப் படங்கள் இவை:

Tamanna SIIMA 2014

குளுமையான தோற்றம், பொன்னிற வண்ணம், கவர்ச்சிகரமான புன்னகை என எடுத்த எடுப்பிலேயே தமிழ்ப்பட இரசிகர்களைக் கொள்ளை கொண்ட நடிகை தமன்னா, பின்னர் இந்திப் படங்களில் ஆர்வம் கொண்டு மும்பாய் பக்கம் ஒதுங்கினார்.

#TamilSchoolmychoice

Tamanna SIIMA 2014

நமது மயிலு ஸ்ரீதேவி அந்தக் காலத்தில் நடித்து வெற்றி பெற்ற “ஹிம்மத்வாலா” என்ற இந்திப் படம் மீண்டும் கடந்த ஆண்டில் எடுக்கப்பட்டபோது தமன்னா அதில் நடித்தார். ஆனால் படம் ஏனோ வெற்றி பெறவில்லை. சில இந்திப் பட கதாநாயகர்கள் தமன்னாவுக்கு தொடர்ந்து வாய்ப்பளித்தாலும், ஏனோ வட நாட்டுப் பெண்ணான தமன்னாவால், வட நாட்டிலேயே வெற்றிக் கொடி நாட்ட முடியவில்லை.

Tamanna SIIMA 2014

நடித்த இந்திப் படங்கள் வரிசையாகத் தோல்வி அடைய, மீண்டும் தமிழ்ப்பட திரையுலகில் கரை சேர்ந்தவருக்கு ஆதரவளித்தவர் அஜித். அவருடைய வீரம் படத்தில் கதாநாயகியாக வலம் வந்த தமன்னா, அடுத்து சில தமிழ்ப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார். இருப்பினும்,  நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மறு பிரவேசம் செய்த நயன்தாராவை இருகரம் நீட்டி ஏகோபித்த வரவேற்பு கொடுத்த தமிழ் இரசிகர்கள், தமன்னாவுக்கு ஏனோ அவ்வளவாக வரவேற்பு வழங்கவில்லை.

Tamanna SIIMA 2014

தனது சிவந்த நிறத்திற்கேற்ற சிவப்பு வண்ண சேலைகட்டி, சைமா விருதளிப்பு விழாவின் சிவப்புக் கம்பள வரவேற்பில் நடந்து வந்து அசத்தினார் தமன்னா. நிகழ்ச்சியைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான இரசிகர்களையும் கவர்ந்தார்.

செல்லியல் பிரத்தியேகப் படங்கள் – செய்திகள்.