Home நாடு சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்கிழமை பதவி ஏற்பு!

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் செவ்வாய்கிழமை பதவி ஏற்பு!

659
0
SHARE
Ad

Sultan-Selangor-Sultan-Sharafuddin-Idris-Shah1பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 18 – வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு இஸ்தானா ஆலம் ஷா, அரண்மனையில் சிலாங்கூரில் புதிய மந்திரி பெசார் பதவி ஏற்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

மாநிலத் தலைவர்கள், பிரதிநிதிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்களுக்கு இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார் என்பது அரண்மனை முடிவுசெய்துவிட்டது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

சிலாங்கூரின் புதிய மந்திரி பெசார் யார் என்ற விபரம் நாளை தெரிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.