அதே வேளையில், சிங்கப்பூர் சார்பில் எழுத்தாளர் சூரியரத்னாவின் ‘நான்’ சிறுகதைத் தொகுப்பிற்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 13-ம் தேதி, சிங்கப்பூரில் நடைபெற்ற இந்த விருது விழாவில், முஸ்தாபா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முஸ்தாபா முன்னிலை வகிக்க, தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.திருமலை விருதுக்குரிய நூல்களைத் தேர்வு செய்யும் முறை பற்றிய ஆய்வுரை வழங்கினார்.
மேலும், இவ்விழாவில் சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தலைவர் நா.ஆண்டியப்பன் வரவேற்புரையும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.இராஜேந்திரனும், சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கத் தலைவர் இராஜாராமும் வாழ்த்துரையும் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, தமிழ்ப் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் தலைவர் முனைவர் சா.உதயசூரியன் விருதுபெறும் படைப்பாளர்கள் பற்றிய தகுதியுரையை வழங்கினார்.
இலங்கை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் வ. மகேஸ்வரன் நூல் குறித்த மதிப்புரை வழங்கினார்.
துணைவேந்தர் முனைவர் ம.திருமலை விருதுபெறும் இரு எழுத்தாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்துத் தங்கப்பதக்கம் வழங்கினார்.
இவ்விழாவில் ந.பச்சைபாலனும், சூரியரத்னாவும் தங்களின் ஏற்புரையில் கரிகாலன் விருதிற்கு காரணமானவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, தங்களின் நூல் குறித்தும் விளக்கமளித்தனர்.
அவர்களைத் தொடர்ந்து, சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் சுப.அருணாசலம் நன்றியுரையாற்றினார்.