சென்னை, செப்டம்பர் 22 – சிம்பு, தங்கும் விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போன்ற காணொளி பேஸ்புக்கில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் அதில் இருப்பது தான் இல்லை என்று நடிகர் சிம்பு மறுப்பும், அதிர்ப்தியும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் மலேசியாவில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் சிம்பு கலந்து கொண்டார். விருது விழா கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மலேசிய தலைநகர் கோலாம்பூரில் நடைபெற்றது.
இந்நிலையில் கடந்த 13-ம் தேதியன்று தக்கும் விடுதி ஒன்றின் மின் தூக்கி அருகில் ஒரு ஆணும், பெண்ணும் உதட்டு முத்தம் கொடுக்கும் காணொளி இணையதளத்தில் வெகுவாக பரவியுள்ளது.
காணொளியில் இருப்பது சிம்புவும், சிமா விருது விழாவை தொகுத்து வழங்கிய ஹர்ஷிகா என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சர்ச்சைக்குரிய காணொளியில் இருப்பது தான் இல்லை என்றும், அந்த காணொளி போலியானது என்றும் சிம்பு மறுப்பு தெரிவித்துள்ளார். போலியான காணொளியை பார்த்து நான் எதற்காக கோபப்பட வேண்டும் என்றும் கேட்டுள்ளார் சிம்பு.