Home உலகம் ஆப்கன் புதிய அதிபராக அஷ்ரப் கானி விரைவில் பதவி ஏற்பு!

ஆப்கன் புதிய அதிபராக அஷ்ரப் கானி விரைவில் பதவி ஏற்பு!

609
0
SHARE
Ad

AFGHANISTAN-UNREST-ELECTION-RESULTகாபூல், செப்டம்பர் 22 – ஆப்கன் அதிபர் வேட்பாளர்கள் அஷ்ரப் கானியும், அப்துல்லா அப்துல்லாவும் ஆட்சி அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக புதிய அதிபராக அஷ்ரப் கனி விரைவில் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற புதிய அதிபருக்கான தேர்தலில், பல்வேறு குளறுபடிகள் நடந்ததால், நீண்ட காலமாக தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

ஐ.நா. உறுப்பினர்கள் தலையிட்டும் புதிய அதிபரை அறிவிக்க முடியாத நிலை இருந்தது. எட்டு மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று முடிவுகள் அறிவிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வேட்பாளர்கள் அப்துல்லா அப்துல்லா மற்றும் அஷ்ரப் கானி இருவருக்கும் இடையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒற்றுமை அரசாங்கம் குறித்த உடன்படிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதிய அதிபராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட அஷ்ரப் கனி இந்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தார்.

எதிர் தரப்பு வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் இதற்கு உடன்பட்டுள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் அஷ்ரப் கானி தலைமையிலான புதிய அரசு ஆப்கனில் தலைமை ஏற்கும் என்று அந்நாட்டின் தற்போதய அதிபர் கர்சாயின் தகவல் தொடர்பாளரான அய்மல் பைசி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்களாக ஆப்கானிஸ்தானில் நிலவி வந்த ஜனநாயக பிரச்சனைக்கு சுமூக முறையில் தீர்வு ஏற்பட்டுள்ளதற்கு அமெரிக்கா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.